தினத்தந்தி 19.09.2013
காசிபாளையம் பேரூராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் குட்டை
தூர்வாரும் பணி உதவி இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

கோபிசெட்டிபாளையம் அருகே காசிபாளையம்
பேரூராட்சியில் மழைநீரை சேரிக்கும் வகையில் காராப்பாடி ரோட்டில் உள்ள ஒரு
குட்டையை தூர்வாருவதற்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த
நிதியின் மூலம் குட்டையை தூர்வாரி, கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்று
வருகிறது. இந்த பணிகளை ஈரோடு மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர்
கலைவாணன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, குட்டைக்கு தண்ணீர் வரும்
பகுதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். வடகிழக்கு பருவமழை
விரைவில் தொடங்க உள்ளதால், அதற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு
திட்டத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
அதிகாரிகளுக்கு உதவி இயக்குனர் கலைவாணன் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் குமார், செயல் அதிகாரி ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.