தினமணி 26.09.2013
தினமணி 26.09.2013
பூங்காக்களுக்கு தண்ணீர் விட ரூ. 2 கோடியில் லாரிகள்
சென்னையில் உள்ள பூங்காக்களுக்கு தண்ணீர் விடும் பணிக்காக 10 தண்ணீர் லாரிகளை சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளது.
மேலும் கட்டட இடிபாடுகளை அகற்றுவதற்காக 11 பொக்லைன் இயந்திரங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து மாநகராட்சி புதன்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னை
மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் சேரும் கட்டட இடிபாடுகளை அகற்றும்
பணிக்காக 11 பொக்லைன் இயந்திரங்களை ரூ. 2.13 கோடியில் மாநகராட்சி கொள்முதல்
செய்துள்ளன.
இதேபோல, மாநகராட்சியால் பராமரிக்கப்படும் பூங்காக்களுக்கு தண்ணீர்
விடும் பணிக்கு 10 கனரக தண்ணீர் லாரிகள் ரூ. 1.90 கோடியில் கொள்முதல்
செய்யப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.4.03 கோடி ஆகும். இவற்றை
பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மேயர் சைதை துரைசாமி மற்றும் ஆணையர் விக்ரம்
கபூர் ஆகியோர் தொடங்கி வைத்தனர் என்று அந்த செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.