தினமணி 26.09.2013
பல்லடம் நகராட்சியின் அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக 6 பேரை போலீஸôர் கைது செய்தனர்.
- பல்லடம்
நகராட்சி சி.டி.சி காலனியில் 5 வேப்ப மரங்களும், 10 வாகை மரங்களும் வெட்டி
கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, நகராட்சித் தலைவர்
சேகர், ஆணையாளர் பன்னீர்செல்வம், கிராம நிர்வாக அலுவலர் சந்தியா, வருவாய்
ஆய்வாளர் ஜலஜா ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, அனுமதி இன்றி
மரங்கள் வெட்டப்பட்டது தெரியவந்தது.
- இதுதொடர்பாக சதீஷ் (25),
மயில்சாமி (37), கோபால் (33), குப்புசாமி (35), சுப்பன் (75), டைடாஸ் (67)
ஆகியோரை பல்லடம் சப்-இன்ஸ்பெக்டர் குழந்தைவேலு கைது செய்தார். இந்தச்
சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீஸôர் தேடி வருகின்றனர்.