தினமணி 26.09.2013
தினமணி 26.09.2013
பல்லடம் பேருந்து நிலையம் விரிவாக்கப் பணி துவக்கம்
பல்லடம் பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
பல்லடம் நகராட்சி அறிஞர் அண்ணா மத்திய பேருந்து நிலையம் ரூ.1கோடியே 60 லட்சம் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர்
கே.பி.பரமசிவம் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் பி.ஏ.சேகர், துணைத்தலைவர்
வைஸ் பி.கே.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர்
பன்னீர்செல்வம் வரவேற்றார். அரசு கேபிள் டிவி வாரிய தலைவர்
கே.ராதாகிருஷ்ணன் பூமி பூஜை நடத்தி பணிகளை துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.சண்முகம், நகராட்சி
கவுன்சிலர்கள் அம்சவேணி, கிருஷ்ணகுமார், தர்மராஜ், குப்புராஜ் உள்பட பலர்
பங்கேற்றனர்.