தினமணி 27.09.2013
பிளாஸ்டிக் பொருள்களுக்குத்ó தடை: போளூரில் விழிப்புணர்வுக் கூட்டம்
தினமணி 27.09.2013
பிளாஸ்டிக் பொருள்களுக்குத்ó தடை: போளூரில் விழிப்புணர்வுக் கூட்டம்
போளூரில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்தல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
போளூர் பேரூராட்சிப் பகுதியில் உள்ள வியாபாரிகள், திருமண மண்டப
உரிமையாளர்கள், தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த தடை
செய்தல், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் பற்றியும், திடக்கழிவு மேலாண்மை
செயலாக்கம் குறித்தும், வரி வசூல் குறித்தும் கூட்டத்தில் விளக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்கு பேரூராட்சி செயல் அலுவலர் நிஷாத் தலைமை தாங்கிப்
பேசினார் . திருமண மண்டப உரிமையாளர் சங்கத் தலைவர் சண்முகம் முன்னிலை
வகித்தார்.