தினமணி 03.10.2013
விதிமீறி விற்பனை: இறைச்சி பறிமுதல்
பழனியில் விதியை மீறி விற்பனை செய்த இறைச்சிகளை இறைச்சி கடைகளில் இருந்து நகராட்சியினர் பறிமுதல் செய்து அழித்தனர்.
மகாத்மா
காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு அக்.2ம் தேதி எந்தவித விலங்கினங்களையும்
இறைச்சிக்காக வதை செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த
நிலையில், பழனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆணையர் சரவணக்குமார்
உத்திரவின் பேரில், நகர்நல அலுவலர் பொற்கொடி, சுகாதார ஆய்வாளர்கள்
நாட்ராயன், சேகர், மணிகண்டன், செந்தில்குமார், ராமசுப்ரமணியன் ஆகியோர்
பல்வேறு குழுக்களாகப் பிரிந்து ஆய்வு மேற்கொண்டனர்.
பல இடங்களிலும்
இறைச்சிக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், மார்க்கெட்டில் இருந்த மீன்
மார்க்கெட் பகுதியில் மீன் விற்பனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அங்கு
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பினாயில்
ஊற்றி அழிக்கப்பட்டு, உரக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன.