தினமலர் 03.10.2013
“டெங்கு’ இல்லாத பகுதியிலும் “அலர்ட்’ மேயர் பேச்சு
மதுரை:””மதுரையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில்லாத வார்டுகளின் பணியாளர்களும், “அலர்ட்’ ஆக இருக்க வேண்டும்,” என, மேயர் ராஜன்செல்லப்பா பேசினார்.
மதுரையில் நேற்று நடந்த டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கான கூட்டத்திற்கு, கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கமிஷனர் நந்தகோபால் முன்னிலை வகித்தார்.
துவக்கி வைத்து மேயர் ராஜன் செல்லப்பா பேசுகையில், “”டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், சமூக நோக்கோடு பணியாற்ற வேண்டும். “நமது வார்டில் டெங்கு இல்லை என்று அசட்டையாக இல்லாமல், “அலர்ட்’ ஆக பணியாற்றினால், “டெங்கு’ வருவதை தடுக்கலாம்.
உள்ளாட்சியில் சிறந்த பணி, சுகாதாரப் பணி என்பதை உணர வேண்டும்,” என்றார்.
நகர்நல அலுவலர் டாக்டர் யசோதா, நகர் பொறியாளர் மதுரம், உதவி கமிஷனர்கள் ரெகோபெயாம், தேவதாஸ், சின்னம்மாள் பங்கேற்றனர்.