தினத்தந்தி 15.10.2013
20–ந்தேதிக்குள் காலி செய்யாவிட்டால் நடைபாதை கடைகள் அகற்றப்படும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை பாண்டிபஜார்–உஸ்மான் சாலையில் உள்ள
நடைபாதை கடைகளை சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, 20–ந்தேதிக்குள் அகற்றி
விட வேண்டும். இல்லையென்றால் சென்னை மாநகராட்சி சார்பில் கடைகள்
அகற்றப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுதொடர்பாக அந்த அதிகாரி மேலும்
கூறும்போது, ‘சென்னை பாண்டிபஜார்–உஸ்மான் சாலையில் 20–ந்தேதிக்குள் காலி
செய்யப்படாமல் இருக்கும் நடைபாதை கடைகள் போலீஸ் பாதுகாப்புடன்
அப்புறப்படுத்தப்படும். மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும்
தயார்நிலையில் உள்ளனர். தள்ளுவண்டி கடைகளும் அப்பகுதியில் நிறுத்தக்கூடாது.
மீறினால் தள்ளுவண்டியும் பறிமுதல் செய்யப்படும்’ என்றார்.