தினமணி 21.10.2013
கணினி பயிற்சி பெறுபவர்களுக்கு நகராட்சி சார்பில் தேர்வு
தினமணி 21.10.2013
கணினி பயிற்சி பெறுபவர்களுக்கு நகராட்சி சார்பில் தேர்வு
வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கணினி பயிற்சி பெறுபவர்களுக்கு நகராட்சி சார்பில் தேர்வு நடத்தப்பட்டது.
போடி நகராட்சியில் தமிழக அரசின் பொன்விழா ஆண்டு சுவர்ணஜெயந்தி
நகர்ப்புற வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் கணினி
பயிற்சி, தனியார் கணினி பயிற்சி நிறுவனங்கள் மூலம் நடத்தப்படுகிறது.
போடியில் கேட்கே, சி.எஸ்.சி. ஆகிய கணினி மையங்கள் மூலம் நடத்தப்படும்
பயிற்சியில் 340 பெண்கள் பயிற்சி பெற்றனர்.
இவர்களுக்கு எம்.எஸ்.ஆபிஸ், டி.டி.பி, வெப் டிசைனிங், ஹார்டுவேர், 2டி,
3டி, டேலி ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சி முறையாக
நடைபெறுகிறதா என்பது குறித்து நகராட்சி சார்பில் தீவிரமாக
கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி பயிற்சியில் பங்கேற்கும் பெண்களின் வருகை பதிவேடு பயோமெட்ரிக்
முறையில் பதிவு செய்யப்படுகிறது. பயிற்சி பெற்றபின் அவர்கள் முறையாக
பயிற்சி பெற்றுள்ளனரா என்பதை அறிவதற்காக நகராட்சி சார்பில் தேர்வு
நடத்தப்பட்டது. இதற்கான வினாத்தாள் நகராட்சி கணினி பிரிவு மூலம்
தயாரிக்கப்பட்டது.
இந்த தேர்வுகள் 6 பிரிவுகளாக நடத்தப்பட்டது. தேர்வுகளை போடி நகராட்சி
ஆணையாளர் எஸ்.சசிகலா ஆய்வு செய்தார். அப்போது தினமணிக்கு அளித்த பேட்டி:
அரசு சுய வேலைவாய்ப்புக்காக நிதி ஒதுக்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை
பெண்கள் முறையாக கற்று முழுமையான பலனடைய வேண்டும் என்பதற்காக நகராட்சி
சார்பில் தேர்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து பெண்களுக்கு ஃபேஷன் டெக்னாலஜி,
தையல் வகுப்புகள் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
தேர்வு ஏற்பாடுகளை போடி நகராட்சி சமுதாயத் திட்ட அலுவலர்கள் கே.தவமணி,
ஏ.தணிக்கொடி, நகராட்சி கணினி பிரிவு அலுவலர்கள் மற்றும் கணினி பயிற்சி மைய
நிர்வாகிகள் செயதிருந்தனர்.