தினத்தந்தி 23.10.2013
திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.2¾ கோடியில் மின்விளக்குகள் அமைப்பு மேயர் சைதைதுரைசாமி தொடங்கி வைத்தார்

திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட தாங்கல் தியாகராயநகர்,
கணக்கர்தெரு, அன்னை சிவகாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி
சார்பில் ரூ.2.78 கோடி செலவில் புதிதாக 1098 மின்விளக்குகள்
அமைக்கப்பட்டுள்ளன.
இதன் தொடக்க விழா திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.குப்பன் தலைமையில் நடைபெற்றது. மண்டல குழுதலைவர் மு.தனரமேஷ் முன்னிலை வகித்தார்.
விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, சென்னை மாநகர
மேயர் சைதை துரைசாமி கலந்துகொண்டு மின்விளக்குகளை தொடங்கி வைத்தனர்.
விழாவில் மாவட்டப் பொருளாளர் பத்மநாபன், நகரப் பொருளாளர் அம்பிகைதாஸ்,
ஜெயலலிதா பேரவை செயலாளர் அஜாக்ஸ் பரமசிவம், தலைவர் சிவில் முருகேசன்,
கவுன்சிலர்கள் ஆர்.வி.தன்ராஜ், சூரியபாபு, அமுல்ராஜ். சின்னா உட்பட பலர்
கலந்து கொண்டனர்.