தினத்தந்தி 25.10.2013
ஆம்பூரில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் நகரசபை தலைவர் வழங்கினார்

ஆம்பூர் நகராட்சியில் சுவர்ண ஜெயந்தி
ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் 60
பயனாளிகளுக்கு 3 மாத இலவச கணினி பயிற்சி சி.எஸ்.சி. கணினி மையத்தில்
அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகரசபை தலைவர் சங்கீதாபாலசுப்பிரமணி கலந்து
கொண்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் ஆணையாளர் (பொறுப்பு) எல்.குமார்,
துப்புரவு அலுவலர் பாஸ்கர், மேலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர். முடிவில் சமுதாய அமைப்பாளர் (பொறுப்பு) ஜேசுபால்மர் நன்றி
கூறினார்.