தினமலர் 29.10.2013
திண்டுக்கல், தஞ்சை மாநகராட்சிகள் உருவாக்க சட்ட முன் வடிவு தாக்கல்
சென்னை: திண்டுக்கல், தஞ்சை நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயர்த்தும் சட்ட முன் வடிவை, உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.
அதில், கூறப்பட்டுள்ளதாவது:
மக்கள் தொகை அதிகரித்தல், அதற்கேற்ப அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், மக்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், உள்ளாட்சி அமைப்பின் ஆண்டு வருமானம் அதிகரித்து வருதல் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, திண்டுக்கல் மற்றும் தஞ்சை நகராட்சிகளை, மாநகராட்சியாக தரம் உயர்த்த, பட்ஜெட் கூட்டத் தொடரில், முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு, செயல் வடிவம் கொடுக்கும் வகையில், சிறப்பு சட்டம் உருவாக்க, சட்ட முன் வடிவு தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு, சட்ட முன் வடிவில் கூறப்பட்டுள்ளது.