தினமலர் 30.10.2013
தீபாவளி அன்று விடுமுறை கிடைக்குமா?’அம்மா’ உணவக ஊழியர்கள் எதிர்பார்ப்பு
சென்னை: தீபாவளி அன்று விடுமுறை கிடைக்குமா என, மலிவு விலை உணவக ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து, சென்னையில் இயங்கும் மலிவு விலை உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கூறியதாவது:
கணவர், குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்று அவர்களுடன் அமர்ந்து உரையாடி உணவருந்தி பல நாட்கள் ஆகிவிட்டன.தீபாவளிக்கு விடுமுறை கொடுத்தால் எங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியடைவர். மாநகராட்சியில் இருந்து நல்ல செய்தி வரும் என, எதிர்பார்க்கிறோம்,இவ்வாறு அவர்கள் கூறினர்.மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘தீபாவளி அன்று மலிவு விலை உணவகத்திற்கு விடுமுறை விடுவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை’ என்றார்.