தினமணி 31.10.2013
மோட்டார் பொருத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்
தினமணி 31.10.2013
மோட்டார் பொருத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்
மோட்டார் பொருத்தி குடிநீர் திருடுவோரின்
மோட்டர்கள் பறிமுதல் செய்வதுடன், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என
பரமக்குடி நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
பரமக்குடி நகராட்சி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தலைவர்
கீர்த்திகாமுனியசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் டி.என்.ஜெய்சங்கர்
முன்னிலை வகித்தார். ஆணையர் தங்கப்பாண்டி வரவேற்றார்.
கூட்டத்தில் நகர்மன்று உறுப்பினர்கள் பேசியதாவது:
நூர்ஜஹான்பீவி:-அண்ணாநகர் பகுதியில் கடந்த 15 நாள்களாக தெருவிளக்குகள் எரிவதில்லை. அதனை உடனே சரிசெய்ய வேண்டும்.
சங்கீதா (அதிமுக):-கிருஷ்ணா தியேட்டர், பங்களா ரோடு பகுதியில் கொசு
மருந்து அடிக்காததால், சுகாதார சீர்கேட்டுடன் டெங்கு காய்ச்சல் பரவும்
அபாயம் உள்ளது. அப்பகுதிகளில் குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைப்பு
ஏற்பட்டு தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
செல்வி (திமுக): பொன்னையாபுரம் பகுதியில் 27,28 வது வார்டு மக்கள்
கால்வாய் பகுதியில் பயன்படுத்தும் மயானத்தில் அடிப்படை வசதியில்லை. ரேஷன்
கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயா (திமுக): குடிநீர் தொட்டிகளில் அபேட் மருந்தினை குறிப்பிட்ட
இடங்களில் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதனை அனைவரும் பயன்பெறும் வகையில்
செய்ய வேண்டும்.
மலர்கொடி(திமுக): காட்டுப்பரமக்குடி சேதுபதி நகர் பகுதியில்
நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை
தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையர்: நகராட்சிக்கு சொந்தமான பகுதியை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
எம்.கே.கண்ணன் (அதிமுக): தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக குடிநீர் வழங்க வேண்டும்.
தலைவர்: வழக்கமாக அனைத்து பண்டிகைக்களுக்கும் கூடுதலாக குடிநீர் வழங்கப்படுகிறது.
மணிவாசகம் (அதிமுக): வீடுகளில் மின்மோட்டார் பொறுத்தி குடிநீர் திருடுவதை தடுக்க உரிய நடவடிக்கை வேண்டும்.
ஆணையாளர்: நகரின் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
குடிநீர் திருடுவோரின் மின்மோட்டர் பறிமுதல் செய்வதுடன், குடிநீர்
இணைப்பும் துண்டிக்கப்படும்.
முருகேசன் (அதிமுக): எமனேசுவரம் காவல் நிலையத்தின் முன்பு தெருவிளக்கு பொறுத்த வேண்டும்.
வி.எம்.பாக்கியம் (மதிமுக): திரெüபதையம்மன் கோவில் பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி நெடுஞ்சாலையிóல கழிவுநீரை கொட்டுகின்றனர்.
தலைவர்: அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கூட்டத்தில் நகராட்சித் தலைவர் கீர்த்திகா முனியசாமி பேசும்போது.
பரமக்குடி நகராட்சி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான
பல்வேறு நலத்திட்டப்பணிகள் மேற்கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் முதலிடம் பிடிக்கும் வகையில் சிறந்த நகராட்சியாக விளங்கிட நாம்
அனைவரும் பாடுபட வேண்டும் என அறிவுறுத்தினார்.