தினத்தந்தி 02.11.2013
பேரூராட்சிகளின் தணிக்கை தடைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் செயல் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

பேரூராட்சிகளின் தணிக்கை தடைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்
என்று செயல் அதிகாரிகளுக்கு கலெக்டர் கோவிந்தராஜ் உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வுக்கூட்டம்
பேரூராட்சிகள் துறையின் சார்பில் பேரூராட்சிகளில் நீண்ட காலங்களாக
நிலுவையில் உள்ள தணிக்கை தடைகளை நீக்குவது தொடர்பான உயர்மட்ட குழுவின்
ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு
கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் மண்டல இணை இயக்குனர்
(பேரூராட்சிகள்) ரத்தினவேல், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) (பொறுப்பு)
கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சிகளில் நிலுவையிலுள்ள தணிக்கை தடைகள் குறித்து ஆய்வு
மேற்கொள்ளப் பட்டது. இந்த கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 16
பேரூராட்சிகளின் செயல் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் பேரூராட் சிகளில்
நீண்ட நாட்களாக உள்ள தணிக்கை தடைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
தணிக்கை தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை
துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று பேரூராட்சி செயல் அதிகாரிகளுக்கு
கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.