தினமணி 04.11.2013
குடிநீர் வாரிய உதவி பொறியாளர் பணியிடங்கள்: பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு
தினமணி 04.11.2013
குடிநீர் வாரிய உதவி பொறியாளர் பணியிடங்கள்: பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு
சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சியில்
காலியாக உள்ள உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தின்
மூலம் பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை
மாநகராட்சியில் காலியாக உள்ள 95 உதவி பொறியாளர் (சிவில்)
பணியிடங்களுக்கும், குடிநீர் வாரியத்தில் காலியாக உள்ள 40 உதவி பொறியாளர்
(சிவில்) பணியிடங்களுக்கும் பதிவு மூப்பு மற்றும் பி.இ. (சிவில்) கல்வி
தகுதியுள்ளவர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.
பரிந்துரைக்கப்பட்டவர்கள் விவரம், தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு
அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. பதிவு மூப்பு மற்றும் கல்வித்
தகுதி இருந்தும் பெயர் விடுபட்டிருந்தால் வரும் 4-ஆம் தேதிக்குள் தொழில்
மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம்.