தினமலர் 06.11.2013
சேலம் மாநகராட்சி பகுதியில் 3 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்
சேலம்: சேலம் மாநகராட்சி பகுதியில், இன்று முதல், மூன்று நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது.
சேலம் மாநகராட்சி கமிஷனர் அசோகன் வெளியிட்ட அறிக்கை:
சேலம் மாநகராட்சிக்கு வரும் மேட்டூர் – ஆத்தூர் குடிநீர் வழித்தடங்களில், கொட்டாகவுண்டன் பட்டி மற்றும் கோம்புரான்காடு ஆகிய பகுதிகளில், குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. குடிநீர் குழாய்களில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, இன்று (6ம் தேதி) முதல் நவம்பர், 8ம் தேதி வரை, சேலம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே, மாநகர பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.