தினமணி 09.11.2013
அம்மா உணவகத்தில் இன்னும் 10 நாளில் சப்பாத்தி
தினமணி 09.11.2013
அம்மா உணவகத்தில் இன்னும் 10 நாளில் சப்பாத்தி
அம்மா உணவகங்களில் சப்பாத்திகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் இன்னும் 10 நாள்களில் முடியும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு
மலிவு விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. உணவகத்தில் ரூ. 3-க்கு 2
சப்பாத்திகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த
சில வாரங்களாக நடைபெற்று வருகின்றன.
குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான சப்பாத்திகள் தயாரிக்கும்
வகையிலான இயந்திரங்கள் கொள்முதல் செய்து, நிறுவும் பணிகளும் நடைபெற்று
வந்தன.
இப்போது ஓரிரு மண்டலங்கள் தவிர மற்ற மண்டலங்களில் சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
சப்பாத்தி தயாரிக்க ஒவ்வொரு மண்டலத்திலும் தனியாக இடம்
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட இடத்தில் சப்பாத்திகள்
தயாரிக்கப்பட்டு, அம்மா உணவகங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
சப்பாத்திகளை தயாரிக்க தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
2,000 சப்பாத்திகள்: இப்போது முதல் கட்டமாக ஒவ்வொரு உணவகத்துக்கும் 2,000 சப்பாத்திகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மண்டலங்களிலும் இயந்திரங்கள் நிறுவப்பட்டு, அதன் பின்னர்
விற்பனை தொடங்கும். இந்த பணிகள் இன்னும் 10 நாள்களில் முடிவடையும் என்று
மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.