தினமணி 3.11.2009
சிறுவாணி, பில்லூர் குடிநீரில் குளோரின் அளவு பரிசோதனை
கோவை, நவ. 2: சிறுவாணி, பில்லூர் அணைகளில் இருந்து வரும் குடிநீரில் குளோரின் அளவை மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பரிசோதனை செய்தனர்.
காந்திபூங்கா, ராமகிருஷ்ணாபுரம், புலியகுளம், வரதராஜபுரம், பாரதிபூங்கா ஆகிய இடங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு வரும் குடிநீரில் இப் பரிசோதனை செய்யப்பட்டது.
குடிநீர்ப் பிரிவு உதவிப் பொறியாளர்கள் கருப்பசாமி, செந்தில்பாஸ்கர், சுப்பிரமணியம், நாசர், கதிர்வேல் ஆகியோர் தலைமையிலான குழுவின் இச் சோதனையில் ஈடுபட்டனர்.
குளோரின் அளவு லிட்டருக்கு 0.2 மி.கிராம் இருக்க வேண்டும். ஒரு சில இடங்களை தவிர பெரும்பாலான இடங்களில் இந்த அளவு சரியாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுவாணி அணையில் இருந்து தினமும் 80 எம்.எல்.டி. குடிநீரும், பில்லூரில் இருந்து 65 எம்.எல்.டி. குடிநீரும் எடுக்கப்படுகிறது