தினத்தந்தி 22.11.2013
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணி
காலியிடங்களை நிரப்ப பட்டியல் தயாரிப்பு 26–ந்தேதிக்குள் சரிபார்க்க
வேண்டுகோள்

தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தில்
இளநிலை உதவியாளர் பணி காலியிடங்களை நிரப்ப பட்டியல் தயாரிக்கப்பட்டு
உள்ளதால் வருகிற 26–ந்தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சரிபார்த்து
கொள்ளுமாறு வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் தமிழ் செல்வி வெளியிட்டு உள்ள ஒரு
அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
இளநிலை உதவியாளர் பணியிடம்
சென்னை குடிநீர் வடிகால் வாரியத்திற்கான
மாநில அளவில் அறிவிக்கப்பட்ட இளநிலை உதவியாளர் பணி காலியிடங்களுக்கு மாநில
அளவிலான பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது. இப்பணிகாலியிடத்திற்கான கல்வி
தகுதி பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.சி.ஏ அல்லது பட்டப்படிப்பு
தேர்ச்சி மற்றும் கம்ப்யூட்டர் ஆட்டோமேஷன் அரசு சான்று முடித்து
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கவேண்டும். 1–7–2013– நாளில்
ஓ.சி பிரிவினர் 30 வயதும், பி.சி/எம்.பி.சி/ பி.சி முஸ்லிம் பிரிவினர் 32
வயதும் எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ பிரிவினர் 35 வயதும் மிகாமல்
இருக்கவேண்டும்.
இணைய தளத்தில் சரிபார்ப்பு
எனவே மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
திருச்சியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.சி.ஏ அல்லது அரசு
ஆபீஸ் ஆட்டோமேஷன் சான்றினை பட்டப்படிப்புடன் எஸ்.சி/பி.சி பொதுப்பிரிவினர்
18–7–2002 தேதி வரையும், எம்.பி.சி பிரிவினர் 8–10–2002 தேதி வரையும்,
பி.சி முஸ்லிம் 31–7–2003 வரையும், எஸ்.சி.ஏ பிரிவினர் 23–9–2003 தேதி
வரையும், எஸ்.டி பிரிவினர் 25–11–2005 தேதி வரையும் பதிவு செய்துள்ள ஆண்கள்
மற்றும் பெண்கள் பதிவுதாரர்கள் http://tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளத்தில் தங்களது பதிவை சரிபார்த்து இணைய தளத்தில் அடையாள அட்டை பிரதி எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
26–ந்தேதிக்குள்…
பின்னர் வேலைவாய்ப்பு அலுவலக அட்டை
(இணையதளம்) பிரிண்ட் அவுட், அனைத்து அசல் கல்வி சான்றுகள், இவ்வலுவலகத்தால்
ஏற்கனவே வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றின்
ஜெராக்ஸ் பிரதிகளுடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
26–11–2013க்குள் வருகை தந்து பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்று உள்ளதை
தவறாமல் சரிபார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.