தினத்தந்தி 28.11.2013
இணைப்பு துண்டிப்பு கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது

குடியாத்தம் நகராட்சியில் வரி பாக்கி
வைத்துள்ளர்களின் வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அத்துடன்
கடைகளுக்கு சீலும் வைக்கப்பட்டது.
வரிபாக்கி
குடியாத்தம் நகராட்சிக்கு சொத்துவரி,
குடிநீர் வரி, கடை வரி மற்றும் இதர இனங்களில் பாக்கி வைத்துள்ளர்கள் பலமுறை
பாக்கி தொகைகளை செலுத்த அறிவுறுத்தியும் செலுத்தவில்லை. இந்த நிலையில்
நேற்று நகராட்சியில் 12, 13 மற்றும் 14–வது வார்டு பகுதியில் நகராட்சி
ஆணையாளர் (பொறுப்பு) ஜி.உமாமகேஸ்வரி உத்தரவின்பேரில் மேலாளர் சந்திரசேகர்,
வருவாய் ஆய்வாளர் கவிதா, நகராட்சி அலுவலர்கள் தாமோதரன், தீனதயாளன்,
செல்வம், ராம்குமார், சங்கர், ஸ்ரீதர் உள்ளிட்ட பணியாளர்கள் மொத்தமாக
ஒவ்வொரு இடத்திற்கும் சென்று வரி வசூலில் ஈடுபட்டனர்.
குடிநீர் இணைப்பு துண்டிப்பு
அப்போது வரி பாக்கி செலுத்தாதவர்களின்
குடிநீர் இணைப்பு துண்டிப்புகளை துண்டித்தனர். மேலும் கடைகளுக்கும் சீல்
வைத்தனர். இந்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து நேற்று சுமார் ரூ.2 லட்சத்து
25 ஆயிரம் வரி பாக்கி தொகை வசூலிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து நகராட்சி
ஆணையாளர் (பொறுப்பு) ஜி.உமாமகேஸ்வரி கூறுகையில், நகராட்சியில் தொடர்ந்து
வாரத்தில் 2 நாட்களில் பணியாளர்கள் மொத்தமாக சென்று வரி பாக்கி
வசூலிப்பிலும், சீல் வைப்பு நடவடிக்கையிலும் ஈடுபடுவார்கள் என
தெரிவித்தார்.