தினமணி 04.12.2013
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பேரணி
தினமணி 04.12.2013
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பேரணி
மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி
சார்பாக அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட டெங்கு
காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி செவ்வாய்கிழமை நடைபெற்றது.
÷இப்பேரணியை பேரூராட்சித் தலைவர் தாவூத்பீ உசேன் தொடங்கி வைத்தார்.
பேரூராட்சி துணைத் தலைவர் ஆ.சீனுவாசன், செயல் அலுவலர் மா.கேசவன்,
ஆரம்ப சுகாதார அலுவலர் பிரபு, பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் இந்த
பேரணியில் கலந்து கொண்டனர். பேரணயில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள்
கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டுச் சென்றனர்.
முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இப்பேரணி பேரூராட்டசி அலுவலகத்தில் முடிந்தது.