மாலை மலர் 06.12.2013

சென்னை, டிச.6 – முதல்– அமைச்சர்
ஜெயலலிதா உத்தரவுப்படி சென்னை மாநகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்
இன்று தொடங்கியது. இந்த முகாம் 9–ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
வார்டுக்கு தினமும் ஒரு முகாம் என்ற அடிப்படையில் 200 வார்டுகளிலும் 5 நாட்களில் 1000 முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை
8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த மருத்துவ முகாமில், காசநோய்,
மலேரியா, நீரழிவுநோய், இருதயநோய, சிறுநீரக கோளாறு, ரத்த அழுத்தம், ரத்த
சோகை நோய், கருப்பை வாய் புற்றுநோய், டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா
போன்ற நோய்கள் பரிசோதிக்கப்பட்டு இலவசமாக சிகிச்சையும், மருந்துகளும்
அளிக்கப்படுகிறது.
அமைந்தகரை புல்லா அவென்யூ மாநகராட்சி பெண்கள்
மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமை மாநகராட்சி மேயர் சைதை
துரைசாமி தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் விக்ரம்கபூர் முன்னிலை
வகித்தார்.
நகராட்சி நிர்வாகங்களின் செயலாளர் பணிந்தரரெட்டி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
முகாமை தொடங்கி வைத்து மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:–
சென்னை
மாநகர மக்களின் நலனில் முதல்– அமைச்சர் அம்மா அவர்கள் தனி கவனம் செலுத்தி
வருகிறார். தொலைநோக்கு பார்வையில் புதிய திட்டங்களை வகுப்பதில் அவருக்கு
நிகர் வேறு யாரும் இல்லை.
இந்த மருத்துவ முகாமில் 190 மாநகராட்சி மருத்துவ மனையை சேர்ந்த 170 டாக்டர்கள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மழைக்காலத்தில்
ஏற்படும் சுகாதார சீர்கேடுகள், பருவநிலை மாற்றங்களால் ஏற்படும்
நோய்களுக்கு எந்தவித செலவும் இல்லாமல் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 5
நாட்களிலும் 1000 முகாம் நடக்கிறது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த
அலோபதி மருந்தை விட நிலவேம்பு கசாயம், பப்பாளி இலை சாறு போன்ற சித்த
மருந்துதான் சிறந்தது என்று மருத்துவர்களின் ஆய்வு அறிக்கை பெற்று அதனை
நமது முதல்வர் நடைமுறைப்படுத்தினார். இதனால் அந்த நோய் பாதிப்பு கட்டுப்
படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில்தான் டெங்கு காய்ச்சல் பாதிப்பு
குறைவாக உள்ளது. மும்பையில் 6 ஆயிரம் பேரும், கொல்கத்தாவில் 4700 பேரும்,
பெங்களூரில் 4500 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஆனால்
சென்னையில் 150 பேர் பாதிப்படைந்தனர்.
இந்த முகாம் மூலம் சென்னை நகரைச் சேர்ந்த 15 லட்சம் பேர் பயனடைவார்கள்.
இவ்வாறு மேயர் சைதை துரைசாமி பேசினார்.
பின்னர் பள்ளியில் நடந்த முகாமை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில்
துணை மேயர் பெஞ்சமின், எம்.எல்.ஏ.க்கள் கோகுல இந்திரா, கலைராஜன், இணை
ஆணையர் ஆனந்த், மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் பழனி, சுகாதார
அதிகாரிகள் டாக்டர் முருகானந்தம், துணை அதிகாரி தங்கராஜு, கவுன் சிலர்கள்
சுகுமார்பாபு, வேளாங்கண்ணி, அமீர் பாஷா, ஜீவாதீனன், பவானி சங்கர், வசந்தா,
தாடி ம.ராசு, அண்ணா தொழிற்சங்க தலைவர் பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.