மாலை மலர் 07.12.2013

ஆஸ்பத்திரியில் அம்மா உணவகத்தை கடந்த 20–ந்தேதி முதல்– அமைச்சர் ஜெயலலிதா
வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
புறநோயாளிகள்,
உள்நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், உதவியாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள்,
கூலி தொழிலாளர்கள் இந்த உணவகத்தை அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆஸ்பத்திரி
வளாகத்தில் குறைந்த விலையில் காலை, மதியம் உணவு கிடைப்பதால் நீண்ட
வரிசையில் நின்று டோக்கன் பெற்று உணவருந்தி செல்கிறார்கள். வரிசையை
ஒழங்குப்படுத்தும் பணியில் போலீசாரும் அங்கு ஈடுபட்டு வருகிறார்கள்.
சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு ‘சுடச்சுட’ வழங்கப்படுவதால் கூட்டம் அலைமோதுகிறது.
தமிழ்நாட்டிலேயே
பெரிய உணவகமாக இது செயல்பட்டு வருகிறது. 6000 சதுர அடியில், இயங்கும் ஒரே
உணவகம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. உணவகம் தொடங்கி 15 நாட்களில் 75
ஆயிரம் இட்லி இங்கு விற்பனை ஆகியுள்ளது. 13 ஆயிரம் பொங்கல், 18 ஆயிரம்
சாம்பார் சாதம், 8 ஆயிரம் தயிர் சாதம் விற்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
‘அம்மா உணவகத்தில்’ சப்பாத்தி மாலை
நேரத்தில் வழங்கப்பட உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும்
செய்யப்பட்டுள்ளன. 10 நாளில் சப்பாத்தி விற்பனை தொடங்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரி அம்மா உணவத்தில் இரவு நேரத்தில்
டிபன் கிடைக்காமல் வெளியே சென்று வாங்க வேண்டி உள்ளது. சப்பாத்தி விற்பனை
தொடங்கிவிட்டால் 3 வேளையும் குறைந்த செலவில் சாப்பிட முடியும். அதனால்
சப்பாத்தி விற்பனை எப்போது தொடங்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு
இருக்கிறார்கள்.