மாலை மலர் 09.01.2014

சென்னை, ஜன.9 – பருவமழை ஆய்வு குறித்த
கருத்தரங்கம் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் நடந்தது. இதில் சென்னையின்
குடிநீர் நிலவரம் குறித்து சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர்
சந்திரமோகன் பேசியதாவது:–
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தற்போது நீர் இருப்பு குறைவாக உள்ளது.
ஆனாலும்
வீராணம் எரியில் இருந்து தினமும் 18 கோடி லிட்டர், மீஞ்சூர், நெம்மேலியில்
அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து தினமும்
18 கோடி லிட்டர் குடிநீர் கிடைப்பதால் நிலைமையை சமாளித்து வருகிறோம்.
மொத்த குடிநீர் தேவையில் 60 சதவீதம் இந்த இரண்டு நீர் ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது.
தற்போது
குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகள், கண்டலேறு அணை, வீராணம் ஏரி, கடல்நீரை
குடிநீராக்கும் திட்டம் மூலம் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீரை
வினியோகிக்கலாம்.
ஆனால் இந்த ஆண்டு சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி
செய்வதற்காக திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், மீஞ்சூர், பஞ்சட்டி ஆகிய
இடங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் தினமும் 2 கோடி லிட்டர் தண்ணீரை
லாரிகள் மூலம் சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளோம்.
விவசாய
கிணறுகளை வாடகைக்கு எடுத்து தினமும் 4 கோடி லிட்டர் பெறவும், நெய்வேலியில்
கூடுதலாக 10 ஆழ்துளை கிணறுகளை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறி னார்.
கருத்தரங்கில்
வானிலை ஆய்வு மையத்தின் துணைத் தலைமை இயக்குனர் ஒய்.எ.ராஜ், வருவாய்
நிர்வாக ஆணையர் ஸ்ரீதர்ட, வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் உள்பட பலர்
கலந்து கொண்டனர்.