தினத்தந்தி 18.01.2014
மெரினா கடற்கரையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்

புத்தாண்டு, பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னை
மெரினா கடற்கரையில் தினமும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
இதையடுத்து, மெரினாவில் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் புதிது, புதிதாக
உருவானது.
இதனால் மெரினா கடற்கரை முழுவதும் கடைகளாக காட்சியளித்தது. சுற்றுலா
பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கிடையில் மெரினா கடற்கரையை சுற்றி பார்த்தனர்.
புதிய கடைகள் அதிகளவில் திறக்கப்பட்டதால், மாநகராட்சி அனுமதியோடு கடை
வைத்துள்ள வியாபாரிகளுக்கு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த வியாபாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில்
போலீசாரின் உதவியோடு மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று
அதிரடியாக அகற்றினார்கள்.
போலீசாரின் உதவியோடு மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று
அதிரடியாக அகற்றினார்கள்.