தினத்தந்தி 07.02.2014
சென்னிமலை பேரூராட்சி பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட
பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்கள்
பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். எனவே தெரு நாய்களின் பெருக்கத்தை
கட்டுப்படுத்த வேண்டும், என்று பொதுமக்கள் சென்னிமலை பேரூராட்சி தலைவர்
ஜம்பு என்கிற சண்முகசுந்தரத்திடம் புகார் கூறினார்கள். இதையடுத்து ஈரோடு
மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தரவுப்படி சென்னிமலை பேரூராட்சி
பகுதியில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை, கோவையை சேர்ந்த தனியார்
அமைப்பினர் மற்றும் பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் ஒன்று சேர்ந்து,
25–க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்தனர்.
பின்னர் அந்த நாய்கள்
அனைத்தும் சென்னிமலை அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு கால்நடை டாக்டர் செந்தில்செல்வன் தலைமையில் டாக்டர்கள் தெரு
நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர். தொடர்ந்து தெருவில்
சுற்றும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படும் என பேரூராட்சி
நிர்வாகம் அறிவித்துள்ளது.