தினமணி 07.02.2014
அடுத்தாண்டு மேலும் 100 பூங்காக்கள்: மாநகராட்சி முடிவு
தினமணி 07.02.2014
அடுத்தாண்டு மேலும் 100 பூங்காக்கள்: மாநகராட்சி முடிவு
சென்னையில் வரும் நிதியாண்டில் மேலும் 100 பூங்காக்களை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னையில் பூங்காக்களை
அமைத்து, பராமரிக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த
ஆண்டு சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் 200 பூங்காக்கள் அமைக்கப்படும்
என்று அறிவிக்கப்பட்டது.
இதில், 87 பூங்காக்களின் பணிகள் முடிவடைந்துள்ளன. சுமார் 107 இடங்களில்
பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு காரணங்களால் 4
பூங்காக்கள் அமைக்கும் பணிகள் கைவிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னையில் உள்ள திறந்தவெளி நிலங்களில் 100 பூங்காக்கள்
அமைக்கப்படவுள்ளது. இதற்காக 400-க்கும் மேற்பட்ட இடங்களில்
சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன. 100 பூங்காக்கள்
அமைப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அதிகாரிகள்
தெரிவித்தனர்.