தினமணி 11.02.2014
விளம்பர பலகைகள் வைக்க விதிமுறை
தினமணி 11.02.2014
விளம்பர பலகைகள் வைக்க விதிமுறை
சென்னையில் விளம்பர பலகைகளை வைப்பது தொடர்பான விதிமுறைகளை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அண்மையில் வெளியிட்ட செய்தி: மின்னனு
அச்சு விளம்பரப் பட்டிகைகள், விளம்பர அட்டைகளை நிறுவ 15 நாள்களுக்கு முன்பே
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கவேண்டும். நில உரிமையாளரிடம்
இருந்து தடையில்லா சான்று, காவல்நிலையத்தில் பெறப்பட்ட தடையில்லா சான்று
பெற வேண்டும். விளம்பர பலகைகளில், மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற எண்,
காலம், விளம்பர பட்டிகைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை குறிப்பிடவேண்டும்.
10 முதல் 20 அடி அகலம் உள்ள சாலைகளில் 4 அடி உயரம் மற்றும் 2.5 அடி
அகலத்திலும், 100 அடி அகலத்துக்கு மேல் உள்ள சாலைகளில் 15 அடி உயரம்
மற்றும் 25 அடி அகலம் என விளம்பர பட்டிகைகளின் அளவு இருக்கவேண்டும் போன்ற
விதிமுறைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.