தினமணி 11.02.2014
மாநகராட்சி சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் இன்று தொடக்கம்
தினமணி 11.02.2014
மாநகராட்சி சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் இன்று தொடக்கம்
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு
சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை முகாம்களை செவ்வாய்க்கிழமை
(பிப். 11) முதல் மாநகராட்சி நடத்துகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழக
முதல்வரின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு, 66 ஆயிரம் பேருக்கு சிறப்பு
சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும்.
இந்த முகாம்களை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி திரு.வி.க. மண்டலம்
கேசவப்பிள்ளை பூங்காவில் செவ்வாய்க்கிழமை (பிப். 11) தொடங்கி வைக்கிறார்.
இந்த முகாம்களுக்கு சென்னை மாநகராட்சி பொது சுகாதாதத்துறையும், டாக்டர்
மோகன்ஸ் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவமனையும் இணைந்து ஏற்பாடு
செய்துள்ளன. பிப்ரவரி 21-ஆம் தேதி வரை குடிசைப்பகுதிகளில் இந்த முகாம்கள்
நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.