தினமணி 9.11.2009
16 அம்ச திட்டத்துடன் மாநகராட்சியை அழகுபடுத்த முடிவு
திருப்பூர், நவ.8: ஒருங்கிணைந்த திருப்பூர் மாநகராட்சியை அழகுபடுத்த அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 16 அம்ச திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளின் மூலம் இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த தீர்மா னிக்கப்பட்டது.
கடந்த 2008ஜனவரியில் தரம் உயர்த்தப்பட்ட திருப்பூர் மாநகராட்சியுடன் 15வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகளும், 8 ஊராட்சிகளையும் இணைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
இந்த ஒருங்கிணைந்த மாநகராட்சியை அழகுபடு த்துவது குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது.
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். ஆட்சியர் சி.சமயமூர்த்தி, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமி, மேயர் க.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
திருப்பூர் மாநகரில் பழுதடைந்துள்ள மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் மின்கம்பங்களையும் மாற்றியமைத்தல், நொய்யல் ஆறு, கரைகளை சுத்தம் செய்து பலப்படுத்துவதுடன், கரையோரங்களில் மரங்கள் நட்டுவளர்த்தல் மற்றும் மங்கலம் முதல் காசிபாளையம் வரை நொய்யல் ஆற்றின் இருகரைகளிலும் சாலை அமைத்தல், நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்களை புதுப்பிப்பதுடன், தேவையான இடங்களில் புதிய பாலங்கள் அமைப்படும்.
முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்று தல், புதிய சாலைகள் அமைத்தல், சாலைகளின் நடுவில் உள்ள பூங்காக்களை புனரமைப்பதுடன், சாலையோரங்களில் பூங்காக்கள் அமைத்தல், அனுமதியற்ற விளம்பர போர்டுகள் மற்றும் வளைவுகளை அப்புறப்படுத்தி விளம்பர பலகைகளை நெறிப்படுத்துதல், ஜம்மனை மற்றும் சங்கில பள்ளம் ஓடைகளை புனரமைத்தல், பேருந்து ஒரு வழிப்பாதைகளை முடிவு செய்தல், புதிய விளை யாட்டு அரங்குகள் ஏற்படுத்தப்படும்.
மாநகராட்சி எல்லைகளில் திறந்தவெளி பொது இடங்களில் சிறு பூங்காக்கள் அமைத்தல், தேவை யான இடங்களில் போக்குவரத்து சிக்னல் அமை த்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தீவிர மாக்குதல், மரங்கள் நட்டுவளர்த்தல் மற்றும் பிற துறை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் மாநகராட்சி மேம்பாடு குறித்து கலந்தாலோசித் தல் ஆகிய 16 அம்ச திட்டங்களை மாநகராட்சி ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி தாக்கல் செய்தார்.
தொடர்ந்து இத்திட்டங்களின் மீது விவாதங்களு ம், கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன. அதன்படி ஒருங்கிணைந்த மாநகராட்சி பகுதியை அழகுபடுத்த ஏற்படுத்தப்பட்டுள்ள 16 அம்ச திட்டங்களை அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளின் ஒத்துழைப்புடன் விரைவில் செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 15வேலம்பாளை யம், நல்லூர் நகராட்சிகள் மற்றும் 8 ஊராட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தன்னார் அமைப்பு பிரதிநிகள் பலர் பங்கேற்றனர்.