தினமணி 09.11.2009
மெரீனா: மணலிலும் கிரிக்கெட்டுக்கு தடை
மெரீனா கடற்கரை சேவை சாலையில் (சர்வீஸ் ரோடு) கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு யாரும் கிரிக்கெட் விளையாடாத வகையில் ஞாயிற்றுக்கிழமை
சென்னை, நவ. 8: மெரீனா கடற்கரை உட்புறச் சாலையில் கிரிக்கெட் விளையாட விதிக்கப்பட்ட தடை மணல் பகுதிக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நடைப் பயிற்சியில் ஈடுபடுவோர்,வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாட போலீஸôர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தனர்.
மாநகர போலீஸôரின் இந்த நடவடிக்கைக்கு கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இருப்பினும், தடை உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் போலீஸôர் பிடிவாதமாக உள்ளனர்.
இதன் காரணமாக, கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற வாசகங்கள் அடங்கிய பலகைகள் கடற்கரை உட்புறச் சாலையின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டன.இதையடுத்து சனிக்கிழமை காலையில் கிரிக்கெட் விளையாட வருவோரை விரட்ட ஆயுதப்படை போலீஸôர் 50 பேர் நிறுத்தப்பட்டனர். மழை காரணமாக கிரிக்கெட் விளையாடுவோர் யாரும் சனிக்கிழமை கடற்கரைக்கு வராததால் போலீஸôர் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் மழை ஓய்ந்திருந்த நிலையில் ஆவடி, அம்பத்தூர், அயனாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் மெரீனா கடற்கரைக்கு வந்தனர். ஆனால், அவர்களை ஆயுதப்படை போலீஸôர் எச்சரித்து விரட்டியடித்தனர்.
மணல் பரப்பில்…: உட்புறச் சாலையில் விளையாட தடை விதிக்கப்பட்டதை அடுத்து மணல் பரப்பில் கிரிக்கெட் விளையாடியவர்களையும் போலீஸôர் விரட்டினர்.
கடற்கரையில் உட்புறச்சாலை, மணல் பரப்பு என அனைத்து இடங்களிலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.