தி இந்து 23.03.2017
கோவை மாநகராட்சி பகுதிகளில் ரூ.80 கோடியில் மல்டிலெவல் கார் பார்க்கிங் திட்டம்
கோவையில் ரூ.80 கோடி மதிப்பில் மல்டிலெவல் கார் பார்க்கிங் திட்டம்
செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி பட்ஜெட்டை தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் நேற்று
வெளியிட்டார். பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து அவர்
செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காந்திபுரம் கிராஸ்கட் சாலை, ஆர்.எஸ்.புரம், திவான் பகதூர் சாலை, டவுன்ஹால்
பகுதிகளில் அதிக வாகனங்களை நிறுத்தும் வகையில் ரூ.80 கோடி மதிப்பில்
மல்டிலெவல் கார் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக மத்திய, மாநில அரசுகள் ரூ.200 கோடி நிதி
ஒதுக்க உள்ளன. குளங்களைச் சீரமைத்தல் உள் ளிட்ட பல்வேறு பணிகள் இதில்
மேற்கொள்ளப்படும். குப்பையை அள்ளுவதற்காக சென்சார் அடிப் படையில்
செயல்படும் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படும்.
குடிநீர் விநியோகம்
குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தில் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட
பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பாதாள
சாக்கடைத் திட்டப் பணிகள் 97 சதவீதம் முடிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள
பணிகளும் விரைவில் முடிவடையும்.
மேலும், அரசு ஒதுக்கியுள்ள சிறப்பு நிதி ரூ.5.48 கோடி மூலம் குடிநீர்
விநியோகப் பணிகள் மேற் கொள்ளப்படும். இதுதவிர, பில்லூர் 3-ம் திட்டத்தை
செயல்படுத்துவதற் காக புதிய திட்ட வரைவைத் தருவதாக குடிநீர் வடிகால் வாரிய
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திட்ட வரைவுக்கு அரசு ஒப்புதல் அளித்தவுடன்,
பணிகள் தொடங் கும். மாநகராட்சிப் பகுதிகளில் சுமார் 170 முதல் 180
எம்.எல்.டி. வரை தண்ணீர் விநியோகிக்கிறோம். தற்போது 10 முதல் 12
நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய் யப்படுகிறது. இதைக் குறைக்க
முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
கட்டிடக் கழிவுகள் மறுசுழற்சி
உக்கடத்தில் கட்டிடக் கழிவு களை மறுசுழற்சி செய்வதற்காக மறுசுழற்சிக் கூடம் அமைக்கப்பட உள்ளது.
தமிழகத்திலேயே கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக அமைக்கப்படும்
முதல் கூடமாக இது இருக்கும். இதனால், கோவையில் உள்ள நீர்நிலைகளில் கட்டிடக்
கழிவுகள் கொட்டப்படுவது பெருமளவு குறையும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மாநகராட்சிக்குச் சொந்தமான 8 குளங்களைச்
சீரமைப்பது, மாதிரி சாலைகள் அமைத்தல், வை-ஃபை வசதி, மின் விளக்குகள்,
அம்ரூத் திட்டத்தின்கீழ் பூங்காக்களை மேம்படுத்துவது, 22 மாநகராட்சிப்
பள்ளிகளை ஸ்மார்ட் பள்ளிகளாக மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள்
மேற்கொள்ளப்பட உள்ளன.
வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக புதிய
திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும்.
வாடகை சைக்கிள் திட்டம்
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சைக்கிள்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கத்
திட்டமிட்டுள்ளோம். இதற்காக, குறிப்பிட்ட இடங்களில் வாடகை சைக்கிள்
நிலையங்கள் அமைக்கப்படும். சைக்கிள் தேவைப்படுவோர் வாடகை செலுத்தி
சைக்கிளைப் பெற்றுச் செல்லலாம். அவர்கள் செல்லும் இடத்துக்கு அருகில் உள்ள
இடத்தில் அந்த சைக்கிளை விட்டுவிடலாம். ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் மூலம்
சைக்கிள்கள் கண்காணிக்கப்படும். இந்த திட்டத்தை ரூ.38 கோடி மதிப்பில்
செயல்படுத்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.