தினமணி 11.11.2009
மாநகராட்சிகளில் 10 சதவீத திட்ட வல்லுநர்களே தகுதியானவர்கள்
சென்னை, நவ. 10: தமிழக மாநகராட்சிகளில் 10 சதவீத நகரமைப்பு திட்ட வல்லுநர்களே தகுதி வாய்ந்தவர்கள்‘ என்று இந்திய நகரமைப்பு திட்ட நிறுவனத்தின் செயலாளர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற “சர்வதேச நகரமைப்பு தினம்-2009′ நிகழ்ச்சியில் அவர் பேசியது:
“தமிழகத்தில் நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குனரக துறையில் பணியாற்றுகின்ற உதவி இயக்குநர் உள்பட்ட அதிகாரிகளில் 25 சதவீதத்திற்கும் குறைவானவர்கள்தான் தகுதி வாய்ந்த நகரமைப்பு திட்ட வல்லுநர்கள் இருக்கிறார்கள். மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 10 சதவீத திட்ட வல்லுநர்கள் மட்டுமே தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். இந்தநிலைக்கு 1970-க்கும் முந்தைய நாட்களில் உருவாக்கப்பட்ட நகரமைப்பு துறைக்குரிய பணியாளர் துறை விதிகள் தான் இருக்கின்றன. எனவே நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் தயாரிக்கக்கூடிய அலுவலர் பணியான உதவி இயக்குநர் பணிக்கு நேரடி நியமனத்திற்கு “முதுநிலை நகரமைப்பு திட்ட வல்லுநர்கள்‘ படித்தவர்கள்தான் தகுதியானவர்கள் என்ற மாற்றத்தினை பணியாளர் துறை விதியில் ஏற்படுத்த வேண்டும்.அப்போதுதான் நகரமைப்பு துறையில் எதிர்காலத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழும்.
ரியல் எஸ்டேட் சட்டம்: ரியல் எஸ்டேட் (மேம்பாட்டு ஒழுங்குபடுத்துதல்) சட்ட வரைவு மக்களின் கருத்தினை அறிய சுற்றறிக்கையாக விடப்பட்டுள்ளது. இதுபோன்று ரியல் எஸ்டேட் சட்டத்தை தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் ஏற்படக் கூடிய சட்ட ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காண “நகரமைமாநகராட்சிகளில் 10 சதவீத திட்ட வல்லுநர்களே தகுதியானவர்கள் .