தினமணி 12.11.2009
ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி
புதுச்சேரி, நவ.11: புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகில் விழுப்புரம் செல்லும்தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் சேகரிக்க ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எஃப்.ஷாஜகான் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் கடந்த ஆண்டு பெய்த அடைமழையின் போது புதுச்சேரி –விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இந்திரா காந்தி சிலை அருகில் உள்ள பகுதி மழை வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனால் புதுச்சேரி அரசு மழை நீர்சேகரிப்பு ஆழ்துளை கிணறு அமைக்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது.
இதையடுத்து புதுச்சேரி –விழுப்புரம் சாலையில் இந்திரா காந்தி சிலை அருகில் பொதுப்பணித்துறை சார்பில் மழை நீர் சேகரிப்பு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை புதன்கிழமை பொதுப்பணித்துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எஃப்.ஷாஜகான் தொடங்கி வைத்தார். ஆர்.விசுவநாதன், எம்எல்ஏ தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பொறியாளர் மனோகர், கண்காணிப்பு பொறியாளர் மாத்தையன், செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.