தினமணி 12.11.2009
காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம்: வேலூரில் ஆய்வு
வேலூர், நவ. 12: காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்த ஆய்வுக் கூட்டம், வேலூரில் உள்ள நகராட்சிகள் மண்டல இயக்குநர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மண்டல இயக்குநர் கோ.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி சேவை நிறுவன முதுநிலை மேலாளர் ஐ.ராஜ்குமார், மேலாளர் எம்.சுதர்சன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள 12 நகராட்சிகளின் நிதி ஆதாரம், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு ஆணையம் மூலம் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, கடன் வழங்குவது போன்றவை குறித்து ஆய்வு செய்யப் பட்டது.
சத்துவாச்சாரி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, குடியாத்தம், ஆர்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை, தாராபடவேடு, மேல்விஷாரம் ஆகிய நகராட்சிகளைச் சேர்ந்த ஆணையாளர்கள், மேலாளர்கள் பங்கேற்றனர்