தினமணி 14.11.2009
புதிய கட்டடங்கள்: அமைச்சர் ஆய்வு
காரியாபட்டி, நவ.13: விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மல்லாங்கிணறில் ரூ. 54 லட்சம் செலவில் முன்மாதிரி நூலகம், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5.5 லட்சம் செலவில் மெயின் பஜாரில் பேருந்து நிறுத்தக் கட்டடம், ரூ. 4 லட்சத்தில் நவீனக் கழிப்பறை போன்ற கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இவற்றை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தெனóனரசு, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் முத்துவிடம் கட்டடப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் பள்ளி மாணவர்களிடம் பாடங்கள் குறித்த விவரங்களைக் கேட்டார்.
மல்லாங்கிணறு பேரூராட்சித் தலைவர் நாகையா, துணைத் தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலர் எஸ்.எம். போஸ், ஒன்றியக்குழு தலைவர் சம்பத், ஒன்றியச் செயலர் சண்முகச்சாமி,மாவட்ட கவுன்சிலர் போஸ், நகரச் செயலர்கள் மா. முருகேசன், செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.