தினமணி 19.11.2009
கொடைக்கானலில் விதி மீறிய கட்டடங்களுக்கு உரிமம் ரத்து
கொடைக்கானல்,நவ.18: கொடைக்கானலில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ள கட்டங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் விஜயகுமார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
கொடைக்கானல் நகர்ப் பகுதிகளில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கப்பட்ட வரைபடத்திற்கு மாறாக கட்டடங்கள் கட்டப்பட்டு வந்தன. இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்திய பின் 28 கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளன. அவற்றிற்கு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே கொடைக்கானல் நகராட்சி மூலம் முறையாக விதிமுறைகள் பின்பற்றி கட்டடங்கள் கட்டவேண்டும் என அறிவுறுத்தப்படுவதாக ஆணையாளர் தெரிவித்தார்