தினமணி 15.12.2009
சுகாதாரமற்ற தின்பண்டங்கள் விற்ற கடைக்கு சீல்
கரூர், டிச. 14: குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், சுகாதாரமற்ற மிட்டாய் விற்பனை செய்த கடைக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது. குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சுகாதாரமற்ற தின்பண்டங்கள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஆட்சியருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, கரூர் சுகாதார ஆய்வாளர்கள் அண்மையில் கரூர் பேருந்து நிலைய பகுதிகளில் சோதனை நடத்தினர். இந்நிலையில், சுகாதார ஆய்வாளர் சதீஷ் தலைமையில் சுகாதார பணியாளர்கள் திங்கள்கிழமை ராயனூர் பகுதியில் ஆய்வு நடத்தினர். ராயனூர் பொன்நகரில் பெட்டிக்கடை நடத்தி வரும் முனுசாமியின் கடையில் விற்பனை செய்யப்பட்ட மிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.