தினகரன் 24.12.2009
வியாபாரிகளிடம் 300 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கலப் பட பால் விற்பனையா வதை தடுக்க நகர்மன்ற தலைவர், நகராட்சி ஆணையர் ஆகியோர் ஆலோசனைபடி, நகரா ட்சி சுகாதார ஆய்வாளர் கள் அறிவழகன், சுரேஷ், பிச்சமுத்து, ராதா, ராமை யன், டேவிட் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மயிலாடுதுறை நகரில் கேன் கன் மூலம் பால் விற்பனை செய்யும் வியாபாரிகளை சோதனையிட்டனர்.
65 பேரிடம் நடத்திய சோதனையில் 30 பேர் பால் விற்பனை உரிமமி ன்றி வியாபாரம் செய்தது தெரியவந்தது. அவர்களிடம் உரிமத்தொகை வசூலிக்கப்பட்டது. மேலும் 300 லிட்டர் கலப்படம் உள்ளதாக பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. சில்லரைக்கு பால் விற்பவர்கள் வரும் 31ம் தேதிக்குள் உரிமம் எடுக்க அறிவுறுத்தப்பட் டது.