தினகரன் 30.12.2009
ஜனவரி 7&9 வரை 7வது தெற்காசிய தண்ணீர் கண்காட்சி

சென்னை, : சென்னை மற்றும் புறநகரில் வாகன உதிரி பாகங்கள், மருந்துகள், தோல், வேதிப்பொருட்கள் தயாரிப்பு தொழில்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. இதன் காரணமாக நீரின் தேவை அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர் தரத்தின் தன்மை கூடுதலாக கவனிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பன்னாட்டு அளவிலான தண்ணீர், கழிவு நீரகற்றல் சாதன உற்பத்தியாளர்கள் சென்னையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில், சென்னையில் நீர் சுத்திகரிப்பு மற்றும் கழிவுநீர் மேலாண்மை தொடர்பாக, தெற்காசிய அளவிலான 7வது கண்காட்சி, நந்தம்பாக்கத்தில் ஜனவரி 7&9ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. இதில், கடல்நீர் சுத்திகரிப்பு, தண்ணீர் மறுசுழற்சி சாதனங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்படும். இதில், 25 நாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இத்தகவலை, இஏ நிறுவன நிர்வாக இயக்குநர் சுனில் கோராவட் நேற்று தெரிவித்துள்ளார்.