தினமலர் 07.01.2010
மெரீனாவை பாதுகாக்க 67 பணியாளர் நியமனம்
சென்னை : “மெரீனா கடற்கரையை பராமரிக்கவும், கண்காணிக்கவும் உதவி பொறியாளர் தலைமையில் 67 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்‘ என, மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி 94வது வார்டு, லாயிட்ஸ் காலனியில், இலவச கலர், “டிவி‘ வழங்கும் நிகழ்ச்சியில், மேயர் சுப்ரமணியன் பேசியதாவது:மெரீனா கடற்கரை 26 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு சமீபத்தில், முதல்வர் திறந்து வைத்தார். மெரீனா கடற்கரையை தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்க, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.கடற்கரை பூங்காக்களில் உள்ள புற்களை வெட்டவும், மரக்கிளைகளை ஒழுங்கு செய்யவும், நடைபாதைகளை சுத்தம் செய்யவும், 10 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் நவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.மெரீனா கடற்கரையை பராமரிக்கவும், கண்காணித்துக் கொள்ளவும் உதவி பொறியாளர் தலைமையில் 67 பணியாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். இதில் 52 பணியாளர்கள், 14 இரவு காலவர்கள் இடம் பெறுவர்.இவ்வாறு மேயர் பேசினார்.