தினமலர் 22.01.2010
ராசிபுரம் நகராட்சியில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றம்: கமிஷனர்
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்ரமிப்பு அனைத்தும் இன்று அகற்றப்படும்‘ என, நகராட்சி கமிஷனர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட நாமக்கல் சாலை, சேலம் ரோடு, அண்ணாசாலை, கடைவீதி, தேரடித் தெரு, சின்னகடைவீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்ரமிப்பு, பேனர், விளம்பர தட்டி ஆகியவற்றை சம்மந்தப்பட்டோர் தாமாக முன்வந்து அகற்றி கொள்ள வேண்டும்.
தவறும் பட்சத்தில் வருவாய், நெடுஞ்சாலைத்துறை, போலீஸார் ஒத்துழைப்புடன் நகராட்சி முலம் ஜனவரி 22ம் தேதி ஆக்ரமிப்பு அனைத்தும் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அகற்றப்படும் பொருட்கள் எக்காரணத்தை கொண்டும் திருப்பி தரப்பட மாட்டாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.