தினமலர் 29.01.2010
மாநகராட்சி சார்பில் ஒரு லட்சம் புத்தகங்கள்
சென்னை : புதிய நூலகத்திற்கு, மாநகராட்சி சார்பில் ஒரு லட்சம் புத்தகங்கள் வழங்கப் படும் என மேயர் கூறினார்.
மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி பேசும் போது, “கோட்டூர்புரம் பகுதியில் புதிதாக கட்டப் படும் நூலகத்திற்கு, மாநக ராட்சி சார்பில் நூல்களை வழங்க வேண்டும்‘ என்று வலியுறுத்தினார்.அதற்கு மேயர், “அனைத்து கவுன்சிலர்கள் ஒத்துழைப்புடன், சமூக ஆர்வலர் கள் மூலம் ஒரு லட்சம் புத்தகங்களை திரட்டி, அந்த நூலகத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.