மாலை மலர் 29.01.2010
மாநகராட்சி ஊழியர்கள் 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி மேயர் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜன. 29-

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஊழியர்கள் தடுப்பூசிகள் போடும் திட்டத்தை மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப் போது அவர் பேசுகையில், சென்னை மாநகராட்சியும், அரிமா சங்கமும் இணைந்து துப்புரவு பணியாளர்கள், இறைச்சி வெட்டுபவர்கள், மலேரியா தொழிலாளிகள் என மண்டலம்-9ல் பணியாற்றும் 2 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள் பயன்பெறும் வகையில் தடுப்பூசிகள் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் அயனாவரம் மண்டலம்-4 மற்றும் திருவல்லிக்கேணி மண்டலம்-6ல் ரூபாய் 5 லட்சம் செலவில் அரிமா சங்கம் சார்பில் 2500 மாநகராட்சி ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
தற்பொது தலா ரூபாய் 900/- வீதம் மொத்தம் ரூபாய் 4 லட்சம் செலவில் மண்டலம்-9ல் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரிமா சங்கம் சார்பில் தடுப்பூசிகள் போடப்படுகிறது.
இந்த தடுப்பூசிகள் ஒவ்வொரு மாதம் என மூன்று மாதங்கள் 5 வருடத்திற்கு ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதினால் எந்தவித பாதிப்பும் இல்லை. சென்ற ஆண்டு புரசைவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நானும் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இதனால் எவ்வித பாதிப்பும் எனக்கு இல்லை. பி வகை மஞ்சள் காமாலை நோய் மிகவும் மோசமான நோய். ஈரலை பாதித்து, பிற்கா லத்தில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இந்த தடுப்பூசியைப் போடுவதினால் நோயைத் தடுக்கலாம்.
இந்த நோய்க்கிருமி ஊசிகள் மூலமும், காயங்கள் மூலமும் ஒருவருக்கொருவர் பரவுகிறது. எனவே, தடுப்பூசி போடுவது மிகவும் அவசியமாகும். அரிமா சங்கத்தினர் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து லிம்கா சாதனைக்கு பெரிதும் உதவினர். அதே போன்று, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மெரினா கடற்கரையில் குளிர்ந்த குடிநீர் வைக்க முன்வந்துள்ளனர். அவர்களுடைய பணி பாராட்டத்தக்கதாகும். மேலும் மற்ற மண்டலங்களில் அரிமா சங்கம் போன்று மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து அனைத்து பணியாளர்களுக்கும் வருங்காலங்களில் தடுப்பூசிகள் போடுவதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
இதற்கு முன்னர் சென்ற காலங்களில் பத்து, பதினைந்து ஆண்டுகளில் பணிபுரிந்து குடிபழக்கத்தினால் பல்வேறு ஊழியர்கள் உயிரிழந்துள்ளார்கள். இதனை தடுப்பதற்காக சென்னை மாநகராட்சியும், இந்து நாளிதழும் ,டி.டி.கே நிறுவனமும் இணைந்து போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து இறந்தவர் களின் வாரிசுதாரர்களுக்கு வேலை வாய்ப்புகள் 900 நபர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, 2025 தற்காலிக பணியாளர்கள் இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை மாநகராட்சியில் மாண்புமிகு தமிழக துணை முதல்–அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிநிரந்தரம் செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்களுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நல அலுவலர் டாக்டர் குகானந்தம், அரிமா சங்க தலைவர் ஹரிஹரன், அரிமா சங்கம் சார்பில் ரவிச்சந்திரன், பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.