தினமலர் 03.02.2010
நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கனடா நாட்டு மாணவர்கள் உதவி
வாலாஜாபேட்டை: வாலாஜாபேட்டை நகராட்சி பள்ளியில் பயிலும் ஏழை மாணவ, மாணவியர்களுக்கு கனடா நாட்டு ரோட் டரி கிளப் மூலம் அங்குள்ள பள்ளி மாணவர்கள் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது.வாலாஜா ரோட்டரி கிளப் மூலம் கனடா நாட்டு பள்ளி மாணவர்கள் அந்நாட்டு ரோட்டரி கிளப் உதவியுடன் நகராட்சி மத்திய மற்றும் மார்க்கெட் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 26 ஏழை மா ணவ, மாணவிகளுக்கு தலா இரண்டாயிரத்து ஐ நூறு மதிப்பலான கிட் பேக்குகளை அனுப்பி வைத்தனர். பெட், போர்வை, கொசுவலை, சீருடை, நோட்டு புத் தகங்கள் என 21 பொருட்கள் அடங்கிய கிட்பேக் வழங் கும் விழா கிளப் தலைவர் அக்பர்ஷரீப் தலைமையில் நடந்தது. செயலாளர் முனிசாமி முன்னிலை வகித்து வரவேற்றார். இதில் இன்ஸ் பெக்டர் சீத்தாராம், நகராட்சி சேர்மன் நித்தியானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கிட்பேக் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கிளப் முன்னாள் தலைவர்கள் ஸ்ரீதர், மகி, வருமாண்டு தலைவர் குமார், பொரு ளாளர் ராமச்சந்திரன், கமல் கேஆர் ராஜேந்திரன், சஜன் ராஜ் ஜெயின், பாண்டுரங் கன், முத்துகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.