தினமணி 03.02.2010
நகராட்சி இடத்தை பயன்படுத்திய தனியார் பள்ளியின் கதவுக்கு சீல்
வாலாஜாபேட்டை, பிப்.2:ஆர்க்காட்டில் பூங்காவுக்கு என நகராட்சி ஒதுக்கியிருந்த இடத் தை ஆக்கிரமித்த தனியார் பள்ளியின் கதவுக்கு வட்டாட்சியர் திங்கள்கிழமை சீல் வைத்தார்.
ஆர்க்காடு நபிஷா நகரில் வீட்டுமனை லே–அவுட் போடும் போது நகராட்சி பூங்காவுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தினர்,அந்த இடத்தை பள்ளிக்கு சென்றுவரும் பாதை மற்றும் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர்.
இதனால் பொதுமக்களுக்கும், தனியார் பள்ளி நிர்வாகத்திற்கும் பிரச்னை ஏற்பட்டது. இச்சூழலில் சிலர் பூங்கா மைதானத்தில் கோயில் கட்டுவதற்காக மேடை அமைத்தனர். தகவலறிந்த ஆர்க்காடு வட்டாட்சியர் ராணி, நகராட்சி ஆணையர் பாரிஜாதம், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கோயில்கட்டுவதற்காக அமைக்கப்பட்ட மேடையை அகற்றினர். அத்துடன் அப்பள்ளி நிர்வாகம் அமைத்திருந்த பள்ளிக் கதவுக்கும் சீல் வைத்தனர்.