தினகரன் 03.02.2010
கணினி வழிக்கற்றல் திட்டத்தின் கீழ் 112 பள்ளிகளுக்கு கணினி வழங்கல்
விருதுநகர் : கணினி வழிக்கற்றல் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 112 பள்ளிகளுக்கு கணினி வழங்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் விருதுநகர் மற்றும் திருவில்லிபுத்து£ரில் உள்ள மையங்களில் 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் ஆசிரியர்களுக்கு மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கும் வகையில் அனிமேஷன், வர்ணம் தீட்டுதல், பவர்பயிண்ட், எக்ஸ்.எல், ஈமெயில், ரயில்வே டிக்கெட் புக்கிங், நெட்மூலம் தேர்வு உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர் எண்ணிக்கை விவரங்கள், மின்சார வசதி உள்ள பள்ளிகள், பள்ளியில் தலைமையாசிரியர் அறையில் பாதுகாப்பு வசதி உள்ளது.
கணினிகள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வசதி உள்ளது என ஒப்புதல் தரும் பள்ளி விவரங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டு அரசின் பரிந்துரையின் பேரில் பள்ளி வாரியாக கணினிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரையில் மாவட்டத்தில் 112 பள்ளிகளுக்கு கணினி வழங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் மட்டும் கணினிகள் பெற்று வரும் நிலையில் விருதுநகர் எஸ்எம்ஜி நகராட்சி நடுநிலைப்பள்ளி மாவட்டத்தில் முதல் பள்ளியாக மூன்று கணி னிகளை பெற்றுள்ளது. பள்ளியின் இடைநிலை ஆசிரியர் செந்தில் குமார் கூறுகையில்,ÔÔபள்ளியில் 1&2 பயிலும் மாணவர்களுக்கு மாதம் ஒரு வகுப்பும், 3 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலுவோருக்கு வாரம் ஒரு வகுப்பும் கணினி கற்றுத்தரப்பட உள்ளது,ÕÕ என்றார்.