தினமலர் 10.02.2010
காரைக்குடியில் வரி வசூல் முகாம் நகராட்சி தலைவர் தகவல்
காரைக்குடி: “நிலுவையில் உள்ள ஆறு கோடி ரூபாய் வரியை வசூலிக்க, நான்கு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. வரும் 15 ம் தேதி தீவிர வரி வசூல் முகாம் துவங்கும்,’ என காரைக்குடி நகராட்சி தலைவர் முத்துத்துரை, கமிஷனர் ரவிச்சந்திரன் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி 4.53 லட்சம், குடிநீர் வரி 56 லட்சம், தொழில் வரி 60 லட்சம், கடை வாடகை 16 லட்சம் என வரி நிலுவையில் உள்ளது. தீவிர வரி வசூல் மூலம் கடந்த ஆண்டு ஐந்து கோடி வசூலிக்கப்பட்டது. இவ் வாண்டு நிலுவை வரி வசூலிக்க, வரும் 15 முதல் 28 ம் தேதி வரை முகாம் நடக்கிறது.
இதற்கு நான்கு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. விடுமுறையிலும் முகாம் நடக்கும்.போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பிடிபடும் மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். பராமரிப்பு செலவும் வசூலிக்கப்படும் என்றனர்.