தினமணி 12.02.2010
ஒசூர் பஸ் நிலையக் கடைகளுக்கு 4-ம் கட்ட ஏலம்
ஒசூர், பிப்.11: ஒசூர் புதிய பஸ் நிலையக் கடைகளுக்கான 4-ம் கட்ட ஏலம் ஒசூர் சார்–ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு சென்னை நகராட்சி நிர்வாக இணை இயக்குநர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். ஒசூர் நகராட்சி ஆணையர் பன்னீர்செல்வம் தலைமை ஏற்றார். இதில் எட்டு கடைகள் ஏலம் போனது. ரூ.19,000 முதல் ரூ.24,000 வரையில் கடைகளை வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.
இது குறித்து சந்திரசேகரன் கூறியது:
உலக தரத்துடன் கூடிய நவீன பஸ் நிலையம் ஒசூரில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலைய கடைகளுக்கு முன் ஏலம் 4 முறை நடத்தப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தின் கீழ் தளத்தில் உள்ள கடைகளை மட்டுமே தற்பொழுது ஏலத்தில் எடுத்துள்ளனர். மேல் தளத்தில் உள்ள கடைகளுக்கு ஏலம் கோர யாரும் முன்வரவில்லை. எனவே மீண்டும் ஏலம் விரைவில் நடத்தப்படும்.
ஒசூர் பஸ் நிலையப் பணிகள் தற்பொழுது 80 சதவீதம் முடிந்து விட்டன. இன்னும் ஒரு சில மாதங்களில் ஒசூர் பஸ் நிலையம் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்படும். தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றார் அவர். சேலம் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் செüந்தர்ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.